Loading...
Skip to Content

Episode 01 - Chapter 8 - Discussion on the ethical, moral, dharmic issues of the killing of Vaali.

CHAPTER 8 – DISCUSSION OF THE ETHICAL, MORAL, DHARMIC ISSUES OF THE KILLING OF VAALI

 

We would look at a few critiques of the episode next week and conclude this rather large and intense canto the week after.

 

We would begin this wind up of the intense, high octane debate on this hyper-charged canto, by invoking an illuminating research work on how commentators bring to bear on their subjects – classics or scriptures – their own thoughts, using the commentary as a medium to convey their own intellectual and spiritual convictions; and what is more disturbing, some of them, as they find the original works not conforming to their own values or what they consider as offensive, take the extreme step of deleting from the originals, such ‘offensive’ parts. This has not just been a feature of oriental works; indeed, the oriental commentators have been less prone to that extreme, abominable step; the western world has been more guilty of this.

 

Excerpts from “SCRIPTURE, CANON AND COMMENTARY” – A COMPARISON OF CONFUCIAN AND WESTERN EXEGESIS .. by Joh B.Henderson.

 

The most peculiar aspect of the medieval thinker is that he developed HIS IDEAS around a text and expressed them as a commentary” Jose Faur.

 

Until the Seventeenth Century in Europe and later in China, India, and the Near East, THOUGHT, especially with high intellectual trAaditions, was primarily exegetical (elucidating)_ in character and expression. Even those identified as the greatest philosophers in medieval civilisations such as Sankara (788-820) Ch’eng I (103-1107) and al Ghazali (d.1111) framed their cogitations in the form of commentaries on classical or scriptural texts.

 

The problem of explaining apparent immorality or impropriety in the classics or scriptures was more important in Western exegesis of Homer and the Bible than in most Eastern commentarial trAaditions, perhaps because moral outrages were more conspicuous or frequent in these western canons. … Homeric and Christian commentators frequently employed allegory in order to account for apparent moral lapses or offences. …….

 

commentators who eschewed allegorical interpretations of such phrases from the Old Testament as that “an evil spirit from God suffocated Saul” (I Samuel 18.10) were frequently driven to espouses such heretical doctrines as that the God of the Old Testament was an imperfect one, different from the God of the New…..

 

Much of the commentary on the great Indian epic the Ramayana is also centred on explaining moral lapses, especially those of the hero, Rama, in such episodes as his killing of he monkey-king Vali and his subjecting his wife Sita to a horrible fire ordeal, at the end of the epic, in order to prove her chastity. A modern expositor of the Ramayana, Chakravarthi Rajagopalachari, remarks of the latter episode that “Rama’s avatar came to an end with the slaying of Ravana. After that battle, Rama remained only as a king, whose conduct can be explained simply as the behaviour of a king in accordance with the customs of the time.” A related argument that “God takes a lower and limited form by his own ordinance, limitations follow” is the most frequent one employed by Ramayana exegetes to account for Rama’s apparent moral imperfections in the epic.

 

A more drastic means that some Confucius commentators used to deal with apparent improprieties in the classics was simply to delete them following in the footsteps of Confucius. Some commentators proposed to do this not only with the Songs, but even with Mencius. According to Feng Hsiu, parts of the Mencius that contravened the other classics had been added to the text by some of his later disciples. Feng thus deleted those parts from his own “Expunged Mencius”. In so doing, he was to some extent following the example of Mencius himself who refused to accept as authentic a passage in the “Documents Classic” which says pestles floated in the blood shed by the people when they were fighting for a humane ruler.

 

Among commentators in other trAaditions, Homeric scholars are most renowned for excising or atleast signaling lines they consider offensive or immoral. The Alexandrian scholar Aristarchus, for example, deleted four lines from the Iliad, in which Phoenix expresses his desire to kill his father, as well as a line that characterized the goddess Aphrodite for her “voluptuousness”. Zenodotus also deleted lines that seemed to show insufficient respect for the gods, as well as those in which such heroes such as Agamemnon were said to “tremble”.  More commonly though, Alexandrian critics simply marked such passages, rather than eject them altogether.

 

*****

PROF.A.S.GNANASAMBANDAN ON THE SLAYING OF VAALI:

 

Here is an exhaustive excerpt from Prof.A.S.Gnansambandan’s elaborate critique of Kamba Ramayanam, an intensive, literarily high flown, and often incisive and impartial work, that stands out amongst modern Thamizh commentaries on this epic. The Thamizh version needs to be read and enjoyed in its continuing flow and entirety. Only an English gist is given here.

 

மனிதனாக, நடையில் நின்றுயர் நாயகனாக வாழ்ந்து காட்டும் இராகவன் ஒன்றிரண்டு இடங்களில் மனிதனாகவே நடந்துகொள்வது கம்பனது படைப்பு முறைக்கு ஏற்றதாகும். இலக்குவன் தடுத்தும் மாய மான் பின்னே சென்றதும் சூர்ப்பணகையிடம்அந்தணர் பாவை நீ அரசரின் வந்தவன் யான்(2780)** எனப் பேசுவது அவன் மனிதனாக நடந்து கொள்ளக் கூடிய பகுதி ஆகும்.

 

** Rama’s chief and distinguishing attributes include his vow not to see another woman (except as his mother) – eka patni vradhah. Why would he be leAading Surpanaka into that long-winding exchange, explaining, even in mock, why he would not be able to take her hand? A moment of distracted, childish, indiscretion?

 

அதேபோன்று வாலி வதையிலும் அவன் நடந்துகொள்வதாக நினையவேண்டி யுள்ளது. சவரியின் அறிவுரைப்படி சுக்கிரீவன் இருக்கும் இடம் வந்த இராமனை முதன் முதலாகச் சுக்கிரீவன் சந்திக்கிறான். அவனிடம் இராமன் பேசிய முதல் வார்த்தை, “கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம் ஐய! நின்-தீரும் இந்த அடிகள் தன் துயரைப் போக்க உதவும் மலை போல நம்பி வந்தான் என்பதைக் குறிக்கின்றன.

 

அதனால் இராகவனுடைய இந்த வேண்டுகோளைக் காதிற்கூட வாங்கிக்கொள்ளாத கக்கிரீவன், ஒரு பாடல் முழுவதும் தான் படும் துன்பத்தைப் பெரிதாகக் கூறி, உயிரை விடத் தைரியம் இல்லை. ஆகவே நின்னிடம் சரணம் புகுந்தேன் என்று கூறுகிறான். இந்த நிலையில் யாரால் இந்தத் துயரம் சுக்கிரீவனுக்கு நிகழ்ந்தது என்பதை அரைகுறையாக இராமன் அறிந்திருந்தானே தவிர, வாலி கக்கிரீவர் பகைமை முதலியனவற்றையும் அதன் காரணத்தையும் இராமன் அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும், இரண்டு பாடல்களில் இராமன் சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்குகள் நடுநிலையுடன் காப்பியத்தைக் கற்பவருக்கு வியப்பைத்' தருவதாகும். சுக்கிரீவனுடைய துன்பத்திற்குக் காரணம் யார் என்பதை அறிந்துகொள்ளும் முன்னரே தசரத குமாரன்"உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள, முன்நாள் சென்றன போக, மேல் வந்து உறுவன தீர்ப்பல் என்றும், "மற்று, இனி உரைப்பது என்னே ? வானிடை மண்ணில், நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்." என்றும் அவசரப்பட்டு, இரக்கம் காரணமாக, இராகவன் கொடுத்த வாக்கே பெருவியப்பைத் தருவதாகும். ஒரு பொருளை முழுவதும் அறியாமல் வாக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு அந்த வாக்கைக் காப்பதற்காகச் சில வேண்டாத செயல்களையும் செய்ய நேரிடுகிறது. சுக்கிரீவன் பகைவன் யாராக இருப்பினும், அவனை ஒர் அம்பால் விண்ணுலகம் உய்ப்பதும், கூட்டு ஒருவரையும் வேண்டா அக்கொற்றவனுக்கு இயலும், அளவு மீறிய இரக்கமும் தன் ஆற்றல்பால் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையும் சேர்த்து இராமனை நின்னைச் செற்றார் என்னைச் செற்றார், தீயரே எனினும் நினக்கு உற்றார் எனக்கும் உற்றார் எனப் பேச வைக்கிறது. இவ்வாறு வாக்குக் கொடுத்த பிறகுதான் சுக்கிரீவனின் பகைவன் யாரென்பதை முதன்முதலாக இராகவன் அறிகிறான்.

 

அனுமன் கூறிய் வரலாற்றில் இடையே இராகவனை அசத்துகின்ற ஒரு செய்தியும் அனுமனால் கூறப்பெற்றது. . . கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர் பட்ட நல் வலம் பாகம் எய்துவான்; எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று, . . அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான். என்ற செய்திதான் அது.

 

இராவணன் போன்ற அரக்கர்களைப் போல என்றோ ஒரு காலத்தில் தவம் செய்து அதனால் பெற்ற வரங்களை முதலாக வைத்துக்கொண்டு, பிறர்க்குக் கொடுமை செய்யும் கொடுமையுடையவன் அல்லன் வாலி என்ற உண்மையான கருத்தும் இப்பாடலின் மூன்றாவது அடியில் நுணுக்கமாக வைக்கப்பட்டுள்ளது. எட்டுத் திசைகளின் எல்லை இறுதிவரை சென்று அட்ட மூர்த்தியாகிய சிவபிரானை நாள்தோறும் (நாளும் உற்று) வழிபாடு செய்வதால் பெறும் வலமாகும், கிட்டுவார் பட்ட நல்வலம் பாகம் எய்தும் சிறப்பு, இதனால் ராகவற்குச் சிந்தனை பிறந்தது. அனுமன் கூறிய வரலாற்றில் 'வாலி யாருக்கும் தீமையோ கொடுமையோ செய்ததாகக் கூறவில்லை. சுக்கிரீவன் மாட்டு அவன் கொண்ட பகைமைக்கும், காரணம் விளக்கப்பெற்றுவிட்டது. தான் கடைந்தெடுத்த அமிழ்தத்தைக் தான் உண்ணாமல் தேவர்களுக்குத் தந்துவிட்ட ஒருவனை எப்படித் தவறாக எடைபோட முடியும்? தம்பி மனைவியை நயந்தான் என்பது விலங்குகளின் வாழ்க்கை முறை, அதனைப் பெரிதுபடுத்த இயலாது என்பதையும் இராகவன் அறிந்திருந்தான்.

 

பகைவன் யார், ஏன் பகைவன் ஆனான் என்பவற்றை அறியும் முன்னரே உன் பகைவர் என் பகைவர் என வாக்குத் தந்ததாலும் வாலியைக் கொல்வது இன்றியமையாக் கடமை யாகிவிட்டது. வாலியைக் கொன்றால்தான் 'தாரமோடு தலைமையும் சுக்கிரீவனுக்குத் தர முடியும். வாலியைக் கொல்லவேண்டு மென்றால் பட்ட நல்வலம் பாகம் எய்தும் ஒரு வரம் குறுக்கே நிற்கிறது. வரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருந்தால், அவ்வரங்கள் பலமிழந்திருக்கும். இராவணன், இந்திரசித்துப் போன்றவரின் வரங்கள் பலமற்றுப் போனமைக்கு இதுவே காரணமாகும். ஆனால், வாலியைப் பொறுத்தமட்டில் அவன் வரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தினான் என்று ஒரு நிகழ்ச்சியைக்கூட அனுமனாலோ, சுக்கிரீவனாலோ சொல்ல முடியவில்லை. இந்த நிலையில் உண்மையான தர்மசங்க்டத்தில் அகப்பட்டுக்கொள்கிறான், தசரக குமாரன்.

 

 தம்பியிடம் யோசனை கேட்கலாம் என்றால், தொடக்கத்தி லிருந்தே சுக்கிரீவன் செயலை வெறுப்பவனாகவே உள்ளான். ஆகவே, இராமனின் தர்மசங்கடம் வலுவாகிவிட்டது. சவரி முதலானவர்கள் தன்னைச் சுச்கிரீவனிடம் அனுப்பியதில் ஏதோ ஒரு காரணம் இருப்பதை இராகவன் நினைக்கிறான். பிராட்டியை மீட்க வாலி ஒருவனே போதுமானவனாக இருக்க, அவனிடம் டோகச் சொல்லாமல் அஞ்சி வாழும் அப்பாவியாகிய சுக்கிரீவனிடம் போகச் சொல்லியதற்குத் தக்கதொரு காரணம் இருத்தல் வேண்டும் என்பதைச் சிந்தித்த இராகவன், சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவிற்கு வந்ததில் தவறொன்றும் இல்லை. அதைக் காப்பாற்ற வேண்டுமாயின் வாலியின் வரம் குறுக்கே நிற்கின்றது. என்ன செய்வது? இராகவனுடைய வாழ்க்கையில் இதுபோன்ற தர்மசங்கடம் முன்னரும் எழுந்துள்ளது. ஆனால், அந்தத் தர்மசங்கடத்திலிருந்து விடுவிக்க ஒரு பெருந்துணை இருந்தது. அந்தத் தர்மசங்கடத்தை உண்டாக்கிய தாடகை பிறர்க்கு இன்னா செய்கின்றவள். வாலியைப் பொறுத்தமட்டில் அதுவும் இல்லை. இந்த நிலையில் வாலியைக் கொல்வதற்கு, சுக்கிரீவனிடம் கொடுத்த வாக்கைக் காப்பதற்கு, சவரி கூறியன அறிவுரையை ஏற்பதற்கு, ஒரே வழிதான் உண்டு. அந்த வழியை மேற்கொள்வதானால் நல்வலம் பாகம் எய்துகின்ற ஒரு தடையுளது. இத்தடையை மீறவேண்டுமானால் ஒரே வழிதான் உண்டு. அந்த வழிதான் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு இராமன் மேற்கொள்கின்ற முடிவாகும். அந்த வழி வேறு நின்று எவ்விடத் துணிந்தது என்பதாகும். நீண்ட யோசனைக்குப் பிறகு தான் இம்முடிவுக்கு வந்தேன் என்பதைச் சுக்கிரீவனுக்குச் சொல்லும்பொழுது இது என் கருத்து என்று கூறி முடிக்கின்றான்..

 

எதிர்ப்பட்ட தர்மசங்க்டத்திலிருந்து மீள மறைந்து நின்று அம்பு தொடுத்து வாலியைக் கொல்வது என்ற முடிவிற்குஇராமன் வந்துவிட்டான். இம்முடிவை இராமன் விரும்பி ஏற்றுக்கொண்டான் என்றோ கடமையை நிறைவேற்றப் போகிறோம் என்று மகிழ்ந்து ஏற்றுக்கொண்டான் என்றோ கூறுவது பெருந்தவறாகும். மறைந்து நின்று அம்பு எய்தல் வில் அறம் துறப்பதாகும். வில் அறம் துறக்காமல் இருக்க வேண்டுமானால் வாலியைக் கொல்ல இயலாது. அது நடைபெறவில்லையானால் 'தாரமிோடு தலைமையும் தருகிறேன்' என்று சுக்கிரீவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாது. வாக்கை நிறைவேற்றுவதா? அல்லது வில்லறம்துறப்பதா? என்பதுதான் இராமன் அகப்பட்டுக்கொண்ட தர்மசங்கட நிலையாகும்.

 

யாராக இருப்பினும், அவர்களைத் தன் வில் கொண்டு வெல்ல முடியும் என்ற துணிவுடன், இராகவன் சுக்கிரீவனுக்கு வாக்குக் கொடுத்தான். இச்செயல் வில்லறம் துறக்கும் செய்கையாகும் என்பதையும் இராகவன் நன்கு அறிந்திருந்தான். அறிந்தே செய்த செயல் ஆகும் இது. வில்லறம் துறந்து ஏதோவொரு குரங்கை-சுக்கிரீவன் பகைவனாகிய வாலியைக் கொல்லப் போகிறோம் என்று நினைத்தானேயொழிய, அத்தகைய பகைவன் கல்வி, அறிவு, பண்பாடு, உபகாரச் சிந்தை, தன்னலமின்மை, அஞ்சாமை ஆகிய பண்புகளில் தலைநின்றவன் என்பதையும் சுக்கிரீவனுக்கும் வாலிக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ளவேறுபாடு இருப்பதையும் அறியவில்லை. வாலியின் முற்பகுதி உரையாடல் பிற்பகுதி உரையாடல் என்பவற்றின் மூலமே இராகவன் அவற்றை அறிந்துகொண்டான். - நுண்மாண் மிக்கவனும், தேர்ந்த அரசியல் ஞானியும், எதிர் நிற்பவனை ஒரு கணத்தில் எடைபோட வல்லவனும் ஆகிய தசரதன் தோன்றல் வாலியின் உரையாடலை வைத்துக்கொண்டே இவன் இத்தகையவன்' என்பதையும் அவன் அரசாட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் ஒரு விநாடியில் அறிந்துகொள்கிறான். அவனுடைய வருத்தத்திற்கும், அங்கதனிடம் நீ இது பொறுத்தி என்று கூறுவதற்கும் இதுவும் ஒரு காரணமாய் அமைந்தது.

 

சுக்கிரீவனை அனுப்பிய பிறகு அனுமனைத் தனியே அழ்ைத்து அச்சொல்லின் செல்வனிடம் துண்மையான கருத்து ஒன்றை இராகவன் பேசுவது நமது சிந்தனைக்குரிய ஒன்றாகும். “நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற வரம்பு இலாததனை, மற்று ஒர் தலைமகன் வலிதின் கொண்டால் அரும்புவ, நலனும், தீங்கும்; ஆதலின், ஐய! நின்போல் பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது - - அம்மா!” 

 

வாலியின் பெருமை தெற்றெனத் தெரியவே, இராகவன் மனம் கசிவதாயிற்று, வில்லறம் துறந்து வாலியைக் கொன்ற செயலுக்கு இராகவன் வருந்தியிருத்தல் வேண்டும். அவ்வருத்தத்தைப் போக்கிக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வாலியின் உயிரை மீட்டுத் தருவதாகும். "ஆருயிர்துறக்கல் ஆற்றேன்”  என்று சொல்லிக்கொள்ளும் சுக்கிரீவனைப் போல வாலிக்கு உயிர்மேல் ஆசையில்லை என்பதை வீட்டரசு எனக்கு நல்கினான் எம்பி, என்ற வாலியின் கூற்றால் இராமன் நன்கு அறிந்துகொண்டான். அப்படியானால் தன் செயலுக்கு வருந்தும் மனநிலையை எவ்வாறு வாலிக்குத் தெரிவிப்பது என்று எண்ணம் உற்றான் போலும், இராகவன். தன் கருத்தை வாலிக்கு வெளிப்படுத்தவேண்டும் என்று நினைத்து அதனைச் செயலாற்ற நினைப்பதற்கு முன்னர் நிகழ்ச்சிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்றுவிட்டன. அதன் முடிவில் வாலிவானுக்கு அப்புறத்து உலகன்" ஆகப்போகிறான். எனவே, இராமன் தன் மனத்தில் தோன்றிய எண்ணத்தை நிறைவேற்ற வகையறியாது மன வருத்தத்தோடும் மயக்கத்தோடும் இருக்கின்ற நிலையில், வாலியின் மைந்தனாகிய அங்கதன் அடைக்கலப் பொருளாக இராமனிடம் ஒப்புவிக்கப் படுகிறான். தந்தையாகிய வாலியிடம் சொல்ல வேண்டியதை மைந்தனிடம் எவ்வாறு சொல்வது? தன் மனநிலையைச் சில சொற்களில் கூறவேண்டும். வாலியிடம் கூறியிருந்தால் அதன் உட்பொருளை அவன் அறிந்துகொண்டிருப்பான், ஆனால், முன்பின் அறியாத சிறுவனாகிய அங்கதனிடம் அதுபற்றிப் பேசுதல் முறையன்று என்றாலும், ஏதாவது ஒரு வகையில் தன் செயலுக்குக் கழுவாய் தேடவேண்டும். என்று நினைத்த இராகவனுக்குச் சட்டென்று ஒர் யோசனை தோன்றுகிறது., முன்பின் தெரியாதவனும், சில விநாடிகளுக்கு முன்னரே தன் பால் ஒப்புவிக்கப்பட்டவனுமாகிய அங்கதளிடம் கூறுகிறான். ஒப்பற்ற ஒரு செயலைச் செய்கிறான். இராகவன் தன் உடைவாளை அங்கதனிடம் தந்துநீ இது பொறுத்தி என்று கூறியதாகக் கவிஞனின் பாடல் அமைந்துள்ளது. இச்செயலைச் செய்கின்ற விநாடியில் வாலி உயிரை விடும் நிலையில் உள்ளான் என்பதும் அறியத்தகும். இதனைக் கவிஞன், ஒரு நாடகமுறையில் ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறான். நாடகப் பாத்திரங்கள் மூவர்: முக்கியப் பாத்திரமாகிய இராகவன், எல்லாவற்றையும் கண்டு கேட்டுக்கொண்டே சில விநாடிகளில் உயிர் துறக்கப் போகும் வாலி, நடந்தது இன்னதென்று புரிந்துகொள்ள முடியாமல் குழப்பமானவொரு மனநிலையில் இராமனிடம் அடைக்கலப்படுத்தப்பட்ட சிறுவன் அங்கதன். குழம்பிஇருக்கின்ற சிறுவனிடம் - ஏன் இது நடைபெறுகிறது என்று அறிந்துகொள்ள முடியாத மன நிலையில் உள்ள அங்கதனிடம் - தசரத குமாரன் தன் வாளை நீட்டிநீ இது பொறுத்தி" என்று சொல்வதாகவும், இதனைப் பார்த்துக்கொண்டே வாலி உயிர் நீத்ததாகவும் பாடல் அமைந்துள்ளது.

 

தன் அடி தாழ்தலோடும், தாரைத் தடங் கணானும்

பொன் உடைவாளை நீட்டி, நீ இது பொறுத்தி என்றான்;

என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,

அந்நிலை துறந்து, வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்.

 

பல கருத்துவேறுபாடுகளுக்கு இடம் தரும் பாடலாகும் இது. பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான்' என்ற தொடருக்கு இதனை வைத்துக் கொள் என்றே பலரும் பொருள் கூறியுள்ளனர். பொறுத்தி என்ற சொல்லுக்கு வைத்துக்கொள் அல்லது பெற்றுக்கொள் என்றுபொருள் கொள்வது பொருத்தமாகப் படவில்லை. இவர்கள் கருத்துப்போல் நீ இதை வைத்திருப்பாயாக என்ற பொருளில் இராகவன் கூறியிருந்தால் உலகம் ஏழும் ஏத்தின என்று கம்பன் அடுத்தாற்போல் கூறுவதற்குப் பொருளே இல்லாமல் போய்விடும். மாபெரும் நிகழ்ச்சியொன்று நடைபெற்ற இக்களத்தில் இராகவன் திடீரென்று தன் உடைவாளைக் கொடுக்க வேண்டிய தேவை என்ன? அதுவும் சில விநாடிகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பெற்று, அடைக்கலப்படுத்தப்பெற்ற ஒரு சிறுவனிடம் அரசனின் INSIGNIA (symbol of authority) வாளை ஏன் தர வேண்டும்; வாளை வைப்பதற்கு இடமில்லாமல் அங்கதனிடம் தந்தானா? அரசனின் உடைவாளை ஏந்திச் செல்பவர்கள் அரசனிடம் அதிகாரப் பொறுப்பைப் (power of authority) பெற்றவர்கள்போல் கருதப்படுவர். அவனது முழு நம்பிக்கை க்குப் பாத்திரமானவர்கள் மட்டுமே உடைவாளை ஏந்தும் பொறுப்பினை வகிப்பார்கள். கம்பன் இத்தகைய பாடல்களை மறந்தும் பாடமாட்டான். எனவே, இத்தொடருக்கு ஆழமான பொருள் இருத்தல் வேண்டும். முன்னர்க் கூறப்பெற்ற அம்பு தொடுத்ததற்குப் பின்னர் வாலியின் மனநிலை மாற்றத்தையும் அதனால் இராமனுக்கு ஏற்பட்ட மனநிலை மாற்றத்தையும் மனத்தில் வாங்கிக்கொண்டால், இத்தொடரின் உண்மைப் பொருளை அறிந்துகொள்ள முடியும். மனம் வருந்திய இராகவன் நேரிடையாக, சிறுவனாகிய அங்கதனிடம் மன்னிப்புக் கேட்பது பொருத்தமற்ற தாகிவிடும். எனவே, நேரிடையாக, நடைபெற்ற செயலைப் பொறுத்துக்கொள்க என்று கூறாமல், அரசனாகிய தன்னுடைய தலைமை அதிகார அடையாளப் பொருளாகிய வாளை வாலியின் மைந்தனாகிய அங்கதனிடம் நீட்டி, இங்கே நடைபெற்றவற்றை நீ பொறுத்துக் கொள்க என்று கூறினான். வாளையொருவனிடம் நீட்டும்போதே அதனை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சொல்லாமல் விளங்கும். அப்படியிருக்க, 'நீ இது பொறுத்தி நீ இதனைப் பொறுத்துக் கொள்வாயாக என்பது பலனில்சொல் பாராட்டுதலாகும். "தென்சொற் கடந்து வடசொற்கடற்கு எல்லை தேர்ந்தவனாகிய இராகவன் திருவாயில் இத்தகைய வெற்றுச் சொற்கள் வரா. மேலும், பக்கத்தில் நின்ற சுக்கிரீவன்கூடத் தன் சொல்லின் ஆழத்தைப் புரிந்துகொள்ளா வகையில் அறத்தின் நாயகன், இம்மறச் செயலுக்கு வருத்தத்தைத் தெரிவிக்கிறான். உடனிருந்த சுக்கிரீவனுக்கோ பக்கத்தில் நின்ற இலக்குவனுக்கோ, குழம்பிய மனநிலையில் ஏற்றுக்கொண்ட அங்கதனுக்கோ, நீ இது பொறுத்தி' என்ற சொற்களின் ஆழமும், பொருட் செறிவும் தெரிந்திருக்கா என்று நினைய வேண்டியுள்ளது. ஆனால், இச்சொற்கள் யார் காதில் விழவேண்டுமென்றும், யார்மனத்தில்

Comments