Episode 01 - Chapter 18 - Canto on the slaying of Adhikaya.
Chapter 18 – Canto on the Slaying of Adhikaya - அதிகாயன் வதைப் படலம்
Ravana is handling two distressing experiences both at once – the humiliation at (the feet!) of Sita and the war front news that Kumbhakarna was no more. The poet presents Ravana in that turmoil:
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற,
எழுந்து எரி வெகுளியான், இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரைச் சுளித்து நோக்குறா,
மொழிந்தனன், இடியொடு முகிலும் சிந்தவே.
Ravana was a firestorm: Ravana’s incendiary state would put ‘in the shade’ even the all-consuming ‘vadavaa mugagni’, a fury that was fed continuously. He looked at his Councilors with a scorching frown and thundered –
ஏகுதிர், எம் முகத்து எவரும்-என்னுடை
யோக வெஞ் சேனையும், உடற்றும் உம்முடைச்
சாகரத் தானையும், தழுவச் சார்ந்து, அவர்
வேக வெஞ் சிலைத் தொழில் விலக்கி வீட்டிரால்.
“Get lost, go away from my presence! The combined might of my reputed and skilled army and those of yours, could not meet – let alone overwhelm – the archery skills of the enemy.”
"எடுத்தவர் இருந்துழி எய்தி, யாரையும்
படுத்து, இவண் மீடும்" என்று உரைத்த பண்பினீர்!
தடுத்திலீர் எம்பியை; தாங்ககிற்றிலீர்;
கொடுத்திலீர், உம் உயிர்; வீரக் கோட்டியீர்.
“You boasted – ‘we would invade them (Rama and Lakshmana and the vanaras) in their own den and shall return after finishing all of them’. You could not save my brother. You could not protect him from harm. You did not deem it your duty to stake your lives for him. Yet, you would (like to) be remaining enumerated in the list of valourous warriors?”
‘உம்மையின் நின்று, நான் உலகம் மூன்றும் என்
வெம்மையின் ஆண்டது; நீர் என் வென்றியால்
இம்மையில் நெடுந் திரு எய்தினீர்; இனிச்
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால்.
“I had gained my command over all the three worlds since long ago, with my might, my valour, my ventures. You all lorded over and enjoyed the pleasures and opulence from those ventures and exertions of mine. If you were true to your salt, you should have reciprocated and executed your duty, even staking your lives.”
‘"ஆற்றலம்" என்றிரேல் என்மின்; யான், அவர்
தோற்று, அலம்வந்து உகத் துரந்து, தொல் நெடுங்
கூற்று அலது உயிர் அது குடிக்கும், கூர்த்த என்
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால்.
“If you feel impotent, then admit that, and tell me so. I will, all by myself, torment them and defeat them and denying the god of death that opportunity, take their lives myself. I shall see that my sharp spear plunges through the hearts of those two humans and exits through their backs.”
அல்லதும் உண்டு, உமக்கு உரைப்பது: "ஆர் அமர்
வெல்லுதும்" என்றிரேல், மேல் செல்வீர்; இனி,
வல்லது மடிதலே என்னின், மாறுதிர்,
சொல்லும், நும் கருத்து’ என முனிந்து சொல்லினான்.
“There is something more for me to tell you. If you still would say ‘We shall conquer’, go ahead then! Should you fear for your lives in combat, then go home. Tell me what is on your mind,” fumed Ravana. Having poured scorn over the lack of courage nor commitment on the part of his commanders, Ravana leaves the door just a bit ajar for them to be aroused enough and offer to go and fight for him.
நதி காய் நெடு மானமும் நாணும் உறா,
மதி காய் குடை மன்னனை வைது உரையா,
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான்
அதிகாயன் எனும் பெயரான் அறைவான்.
Adhikaya, the warrior son of Ravana, was shamed and provoked by Ravana’s humiliating scorn. He would retort his father with a matching scorn.
வான் அஞ்சுக; வையகம் அஞ்சுக; மா-
லான் அஞ்சு முகத்தவன், அஞ்சுக; "மேல்
நான் அஞ்சினேன்" என்று, உனை நாணுக; போர்
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ?
“Let the celestials be afraid. Let the earthlings be afraid. Let Thirumaal and the five-faced** Siva be afraid. And, if that be true, you be ashamed that you are afraid as well. How dare you say that I was afraid of combat?”
** Panchamukha Siva –
The five faces (from left to right) are Ishana, Tatpurusha, Aghora, Vamadeva and Sadyojata. They rAadhiate, in order, revealment of grace, sublimation of the five senses, omnipresence, omnipotence and omniscience. This sequence is the creative cycle, when reversed the cycle of dissolution is depicted
According to Saiva Agamas – religious treatises – Lord Siva is the complete master engaged in all the cosmic functions – creation, sustenance and dissolution, and two in addition – the soul’s obscuration (veiling the truth from the beings) and revelation (eventual realization for those who qualify.)
“Based on the Saiva Agamas, the three great cosmic actions are all performed by God Siva. In addition to creation, preservation and destruction, Siva performs two more actions which relate specifically to the soul. With the fourth, called obscuration, He veils Himself from us, the embodied souls, purposefully limiting our awareness, keeping us ensconced in the world—oblivious to our true nature, our past and future lives and karmas—thus allowing us to evolve. This beguiling force is called veiling or concealing grace, tirodhana shakti. With His fifth action or power, called revelation, anugraha shakti, Lord Siva frees us from the illusion of separateness from Him, granting us realization of our true identity. The birth of the world, its maintenance, its destruction, the soul’s obscuration and liberation are the five acts of His dance.” Courtesy, Himalayan Academy.
“ஆக்கி அளித் துலகை நீக்கி மறைத் தருளி ஐந்தொழில் புரிந்திடும் அம்பலவாணனே.” Would extol Lord Siva, this celebrated Suddhananda Bharathi composition (beginning தூக்கிய திருவடி துணையென் நம்பினேன்)
Back to Kamban:
வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்-
தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ?
உம்மைக் குலையப் பொரும் உம்பரையும்
கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ?
“Did I not produce to you, imprisoned, the Dhanavas (Asuras), notorious for their warring attributes? Did I not vanquish the celestials, who threatened to get the better of you, just with my sword’s might?”
காய்ப்புண்ட நெடும் படை கை உளதாத்
தேய்ப்புண்டவனும், சில சில் கணையால்
ஆய்ப்புண்டவனும், அவர் சொல் வலதால்
ஏய்ப்புண்டவனும், என எண்ணினையோ?
“Would you equate me with Akshakumara, who, though wielding sharp and fearsome weaponry, got smashed, pasted and literally ground into the dirt? With Kumbhakarna, who was knocked down by some feeble darts (of Rama)? Or, with Vibheeshana who got enchanted** by the word-skills and repute of those two humans?”
Adhikaya would say “ஏய்ப்புண்டவன்” when talking of Vibheeshana – ‘he got tricked’
‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து, அவனைக்
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்,
நம்பிக்கு ஒரு நன் மகனோ, இனி நான்?
“Shall I call myself a good son of yours, if I did not cause the same distress to Rama, who had caused you this grief of killing your brother Kumbhakarna, by plotting the death of Lakshmana, Oh! The lordliest amongst men?”
கிட்டிப் பொருது, அக் கிளர் சேனை எலாம்
மட்டித்து, உயர் வானரர் வன் தலையை
வெட்டித் தரை இட்டு, இரு வில்லினரைக்
கட்டித் தருவென்; இது காணுதியால்.
“Battling with them in proximate intensity, I shall totally devastate those vanaras now intoxicated (by the death of Kumbhakarna), sever the heads of every one of the vanara commanders and thrown them down, and would bind, hands and feet, and bring before you those two humans. You shall see this.”
The verse is in great rhyme and the warrior emotion drips in each syllable.
‘"சேனைக் கடலோடு இடை செல்க" எனினும்,
யான் இப்பொழுதே, "தனி ஏகு" எனினும்
தான் ஒத்தது சொல்லுதி; தா விடை’ என்-
றான்; இத் திறம் உன்னி அரக்கர் பிரான்,
“If you command me to go with a vast army, or even if you ask me to all by myself, either of your commands is fine with me. Just let me go.” Ravana pondered over this greatly intoxicated and stirring peroration of his warrior son.
Adhikaya is brimming with confidence in his own battle skills and warriorship and would offer to go and accomplish the job single-handedly.
‘சொன்னாய், இது நன்று துணிந்தனை; நீ
அன்னான் உயிர் தந்தனையாம் எனின், யான்,
பின் நாள், அவ் இராமன் எனும் பெயரான்-
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால்.
“Very well said, my son. I am sure you have thought this over quite well too. If you, as you swear and promise, fetch me the life of Lakshmana, then following you, I shall take the precious life of that other one – going around in the name of Rama.”
‘போவாய் இதுபோது-பொலங் கழலோய்!-
மூவாயிர கோடியரோடு, முரண்
கா ஆர் கரி, பரி காவலின்’ என்று,
ஏவாதன யாவையும் ஏவினனால்
“Go, the one with warrior anklets! Go with three thousand crores of fighters accompanied by proportionate forces of battle elephants, cavalry and chariots.” So Ravana blessed and ordered all the remaining Rakshasa forces to go with his con.
கும்பக் கொடியோனும், நிகும்பனும், வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும்,- உன்
செம் பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர்.
“Khumba, Nikhumba and Akhamba, the reputed fighters would go with you, along with your chariot, these ones are difficult to be bested even by the celestials”
(Khumba and Nikhumba were sons of Kumbhakarna; Akhamba was the son of Sumali.)
ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
வார் ஏறு வயப் பரி ஆயிரம், வன்
போர் ஏறிட ஏறுவ, பூணுறு திண்
தேர் ஏறுதி; தந்தனென்-வெந் திறலோய்!
“I am providing you with a grand chariot drawn by a thousand magnificent horses, each one of them matching the Rishaba, the ride of Lord Siva, for you to lead into the battle.” (This chariot was reputedly a gift to Ravana by Brahma himself.)
ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர்
சேமத்தன பின் புடை செல்ல, அடும்
கோ மத்த நெடுங் கரி கோடியோடும்,
போம், அத்தனை வெம் புரவிக் கடலே,’
“Going along with that magnificent chariot drawn by so many grand horses, surrounding you on all sides would be great, murderous, battle elephants – a crore of them.”
Adhikaya, warfront bound, is presented:
என்றே விடை நல்க, இறைஞ்சி எழா
வன் தாள் வயிரச் சிலை கைக் கொடு, வாள்
பொன் தாழ் கவசம் புகுதா, முகிலின்
நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால்.
As Ravana bade him and wished him and after paying obeisance to his father and king Ravana, Adhikaya appeared as a humongous raincloud that was wrapped in a grand golden armour and weilding a great bow. The onlooking celestials squirmed in trepidation.
The tremulous mobilization and march:
ஆர்த்தார், நெடு வானம் நடுங்க; அடிப்
பேர்த்தார், நிலமாமகள் பேர்வள் என;
தூர்த்தார் நெடு வேலைகள், தூளியினால்;
வேர்த்தார், அது கண்டு விசும்பு உறைவோர்.
“The multitudes of warriors accompanying Adhkaya roared, and the sky trembled; as they marched goose-stepping, it looked as though the earth would cave in; the huge clouds of dust that rose from this thunderous march could fill vast spaces of the seas. The celestials, looking on, sweated in anguish.
மேருத்தனை வெற்புஇனம் மொய்த்து, நெடும்
பாரில் செலுமாறு படப் படரும்
தேர் சுற்றிடவே, கொடு சென்று முரண்
போர் முற்று களத்திடைப் புக்கனனால்.
Surrounded by majestic and huge chariots, Adhikaya arrived at the war front – like a Maha Meru moving in the company of lesser mountains.
Adhikaya views the devastation caused by Rama’s archery, the fallen remains of Rakshasas:
கண்டான், அவ் இராமன் எனும் களி மா
உண்டாடிய வெங் களன் ஊடுருவ;
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
திண்டாடினன், வந்த சினத் திறலோன்.
Adhikaya viewed, with intent, the havoc played on the battlefield by Rama’s darts, toying with and consuming countless lives like rampaging rutting elephants. He gasped, with laboured breath, emotions swinging between angst and fury. The poesy in this word ‘உண்டாடிய’ is not capable of adequate translated expression.
Adhikaya now sees the fallen remains of Kumbhakarna:
மலை கண்டனபோல் வரு தோளோடு தாள்
கலை கண்ட கருங் கடல் கண்டு, உளவாம்,
நிலை கண்டன கண்டு, ஒரு தாதை நெடுந்
தலை கண்டிலன், நின்று சலித்தனனால்.
Adhikaya, seeing the fallen remains of Kumbhakarna, a father-figure for him, recalled in his mind his magnificently huge persona and juxtaposed, the headless torso caused him immeasurable anguish.
‘மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
திடல் அன்று; திசைக் களிறு அன்று; ஒரு திண்
கடல் அன்று; இது என் எந்தை கடக் கரியான்
உடல்’ என்று, உயிரோடும் உருத்தனனால்.
“This is not an island pierced with darts. This is not one of the Dig Gajas fallen here. This is not a vast sea. This is the body of my father, the one who was invincible.” Adhikaya, fumed in anguish.
‘எல்லே! இவை காணிய எய்தினனோ!
வல்லே உளராயின மானுடரைக்
கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில்
செல்லேன், எனின், இவ் இடர் தீர்குவெனோ?’
“Alas! Did I arrive here to see this? Until I took out the lives of those humans in post haste, would this grief in me be quenched?”
என்னா, முனியா, ‘இது இழைத்துளவன்
பின்னானையும் இப்படிச் செய்து பெயர்ந்து,
அன்னான் இடர் கண்டு, இடர் ஆறுவென்’ என்று
உன்னா, ஒருவற்கு இது உணர்த்தினனால்:
Thus angered, Adhikaya would vow: ‘I shall find some reparation for this distress when I see Rama steeped in the same grief, mourning his sibling (as my father, Ravana).’ – suggesting he would take on Lakshmana and see his end.
Adhikaya sends out a messenger to Rama:
வா நீ, மயிடன்! ஒரு வல் விசையில்
போ! நீ அவ் இலக்குவனில் புகல்வாய்;
நான் ஈது துணிந்தனென், நண்ணினெனால்;
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய்.
“Oh! Mayidan! Come hither. Go immediately. Go and tell that Lakshmana. I have resolved thus (beheAadhing him) and shall execute that resolve. Go and tell him appropriately.”
For one who is expansive – liberally so – in his narrative, Kamban finds himself coming forth with quintessential brevity in words – almost mono syllabic commands, these.
"அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்,
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
வந்தான்" என, முன் சொல் வழங்குதியால்.
“Tell him first that Adhikaya, mourning richly garlanded Kumbhakarna and in deep distress and bent on seeking some solace for his father (Ravana) in his grief, has come hither.”
கோளுற்றவன், நெஞ்சு சுடக் குழைவான்,
நாள் உற்ற இருக்கையில், யான், ஒருதன்
தாள் அற்று உருளக் கணை தள்ளிடுவான்,
சூளுற்றதும் உண்டு; அது சொல்லுதியால்;
“Tell him also this: In the Royal Council of Ravana, as he was immersed in grief, I had (publicly) vowed to roll in front of him (Ravana), the headless, limbless torso of your good self.” தள்ளிடுவான் – caps the ghastly vehemence in Adhikaya’s message.
தீது என்று அது சிந்தனை செய்திலெனால்;
ஈது என்று அறம் மன் நெறி ஆம்’ என, ‘நீ
தூது என்று இகழாது, உன சொல் வலியால்,
"போது" என்று, உடனே கொடு, போதுதியால்.
“I do not deem this vow of mine as offending righteousness. Indeed, this is the duty of a ruling royal. Therefore, with your messenger’s skill of persuasion, without feeling diffident, go and fetch him thither.”
செரு ஆசையினார், புகழ் தேடுறுவார்,
இருவோரையும், நீ வலி உற்று, "எதிரே
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்;
வருவோரை எலாம் வருக!" என்னுதியால்.
“Go and present yourself to the two – Rama and Lakshmana – who are warring inclined and seeking glory in combat and invite them : ‘Whoever dares to come, come on: Yama’s abode awaits all of you’”
‘சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான்,
"வந்தான்" என என் எதிரே, மதியோய்!
தந்தாய்எனின், யான் அலது, யார் தருவார்,
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம்?
“Oh! The clever one! If you could get that Lakshmana in front of me, telling him ‘The one who is bent on dousing the grief of his father, has come here, for you’, you would get unimaginable rewards (for that accomplishment) – from me, from who else?”
வேறே அவ் இலக்குவன் என்ன விளம்பு
ஏறே வருமேல், இமையோர் எதிரே,
கூறே பல செய்து, உயிர் கொண்டு, உனையும்
மாறே, ஒரு மன் என வைக்குவெனால்.
“Should that one, going by the name Lakshmana, come here even like a lion, I shall decimate him, cut him into pieces and I shall grant you a kingdom (as reward).”
Here is a tempting reward that should be more attractive for the messenger than the kingdom:
விண் நாடியர், விஞ்சையர், அம் சொலினார்
பெண், ஆர் அமுது அன்னவர், பெய்து, எவரும்
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு
எண்ணாயிரம் ஆயினும், ஈகுவெனால்.
“(Should you successfully fetch Lakshmana to me), you would get more than eight thousand pitchers of liquor (a very rare and potent one), which celestial maidens, cooing pleasurably, would pour and offer to you.”
(The royalty of yore had the privilege of young and charming maidens pour out and offer liquor for them – predominantly a mughal culture?)
நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும்,
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும்,
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்,
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால்.
“I shall gift to you one thousand carts filled with golden wealth, bundles of rare gems and grand, shining like the silvery moon, silk clothes.”
(Adhikaya’s offers of gifts comprise a very long list spread over several verses. We have picked just a few of these.)
மற்றும், ஒரு தீது இல் மணிப் பணி தந்து,
உற்று உன் நினைவு யாவையும் உந்துவெனால்;
பொன் திண் கழலாய்! நனி போ’ எனலோடு,
எற்றும் திரள் தோளவன் ஏகினனால்.
“And, I shall grant you a lot of gem-studded ornaments and everything else that you may wish. Now, go.” And Mayidan, pleased, set out on his mission.
ஏகி, தனி சென்று, எதிர் எய்தலுறும்
காகுத்தனை எய்திய காலையின்வாய்,
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும்,
‘ஓகைப் பொருள் உண்டு’ என, ஓதினனால்.
Mayidan arriving in Rama’s presence was chllenged by the vanaa guards in Rama’s camp. And Mayidan tried to quieten them saying ‘I have good news for you all.’
போதம் முதல், ‘வாய்மொழியே புகல்வான்;
ஏதும் அறியான்; வறிது ஏகினனால்;
தூதன்; இவனைச் சுளியன்மின்’ எனா,
வேதம் முதல் நாதன் விலக்கினனால்.
Rama quelled the rising guards telling them “This one has only a wordy message from his master, he is innocent, is unarmed and is just a messenger. Do not harass him.”
என், வந்த குறிப்பு? அது இயம்பு’ எனலும்,
மின் வந்த எயிற்றவன், ‘வில் வல! உன்
பின் வந்தவனே அறி பெற்றியதால்,
மன் வந்த கருத்து’ என, ‘மன்னர்பிரான்!’
“What is your mission? Tell me.” Mayidan responded: “Oh! The Great Archer! My master’s message is for your brother Lakshmana only.”
Lakshmana, listening in, is excited:
‘சொல்லாய்; அது சொல்லிடு, சொல்லிடு’ எனா,
வில்லாளன் இளங்கிளையோன் விவை,
‘பல் ஆயிர கோடி படைக் கடல் முன்
நில்லாய்’ என, நின்று நிகழ்த்தினனால்.
Lakshmana, excited, would enjoin the messenger: “Tell me, tell me.” Mayidan would say:”Do come in front of the vast army led by Adhikaya, my lord.”
உன்மேல் அதிகாயன் உருத்துளனாய்
நல் மேருவின் நின்றனன்; நாடி அவன்-
தன்மேல் எதிரும் வலி தக்குளையேல்,
பொன் மேனிய! என்னொடு போதுதியால்.
“Oh! Golden complexioned one! Adhikaya is very angry with you! He is waiting for you- like the mighty Meru. If you feel up to taking him on, do come along with me.”
தக்குளையேல் – if you are fit enough.
‘சையப் படிவத்து ஒரு தந்தையை முன்
மெய் எப்படிச் செய்தனன் நும் முன், விரைந்து,
ஐயப்படல், அப்படி இப் படியில்
செய்யப்படுகிற்றி; தெரித்தனெனால்.
“What Rama did to Kumbhakarna, his mountainlike body, likewise you shall be done, right now. Do not doubt that. I have made that clear to you.” சைய – distortion of ‘sailam’ mountain.
"கொன்றான் ஒழிய, கொலை கோள் அறியா
நின்றானொடு நின்றது என், தேடி?" எனின்,
தன் தாதை படும் துயர், தந்தையை முன்
வென்றானை இயற்றுறும் வேட்கையினால்.
“(Should you ask) Instead of going after the one who killed Kumbhakarna (Rama), why you, who had been innocent of that deed, (Adhikaya wants to) it is to let Rama go through the same grief and anguish that his father Ravana has been put through.
Strange, ghastly, but how could one argue with this logic?
The messenger also lays down the basic ground rule for the match and has that lucidly understood by the whole audience – including the celestials:
வானோர்களும், மண்ணினுளோர்களும், மற்று
ஏனோர்களும், இவ் உரை கேண்மின; இவன்-
தானே பொருவான்; அயலே தமர் வந்து
ஆனோரும் உடன் பொருவான், அமைவான்.
“Oh! All celestials! Oh! The earthlings! All others! Hear me! Adhikaya would fight Lakshman by himself, single-handedly. He would not have in this combat any forces other than himself.”
ETHICS AND RULES OF COMBAT WERE WELL DEFINED IN DAYS OF YORE. FRONT-RANKING WARRIORS SET DOWN COMBAT MATCHES WITH THEIR EQUALS AND THE GAUNTLET THROWN WAS NEVER LET OFF. WE SEE THIS CULTURE IN THE MAHABHARATA AS WELL. BUT, OF COURSE, IN THE OVERALL INTEREST OF THE OBJECTIVE OF THE WAR, MANY OF THE RULES WERE BROKEN TOO.
‘எழுவாய், இனி என்னுடன்’ என்று, எரியும்
மழு வாய் நிகர் வெஞ் சொல் வழங்குதலும்,
தழுவா, ‘உடன் ஏகுதி; தாழல்!’ எனத்
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும்.
Mayidan concludes: “Go with me now.” Rama, pleased at this invitation and embracing Lakshmana, would command him: “Go with him, do not delay a moment.”
Vibheeshana intervenes and lets Rama and Lakshmana know what Adhikaya is all about. Next.
Vibheeshana briefs Rama about the antecedents, warrior credentials of Adhikaya:
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான்,
தேவாசுரர் ஆதியர் செய் செருவில்,
சாவான் இறையும், சலியா வலியான்,
மூவா முதல் நான்முகனார் மொழியால்.
“Blessed with a boon from Brahma, as a reward for his long, enduring ascetics, he is invincible even if the celestials take him on, would never tire in combat. “
கடம் ஏய் கயிலைக் கிரி, கண்ணுதலோடு
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை,
திடமே உலகில் பல தேவரொடும்,
வட மேரு எடுக்க, வளர்த்தனனால்.
“(Ravana) goaded by his prowess that made him lift richly forested (?) Kailasa, along with Lord Siva, he prepared his son Adhikaya for lifting Mount Meru, the abode of celestials.”
கடம் ஏய் கயிலைக் கிரி – Thickly forested Mount Kailasa (he means the lower reaches of Himalayas?)
‘மாலாரொடு மந்தரம் மாசுணமும்
மேலாகிய தேவரும் வேண்டும் எனா,
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய,
காலால் நெடு வேலை கலக்கிடுமால்;
“He would churn the Thirupparkadal just with his mighty legs – would not need either the Madhara Mount as churn nor Vasuki as the churn rope.”
Diminishes Ravana’s bravado in taking on the Dig Gajas in presenting Adhikaya’s might:
ஊழிக்கும் உயர்ந்து, ஒரு நாள் ஒருவாப்
பாழித் திசை நின்று சுமந்த, பணைச்
சூழிக் கரி தள்ளுதல் தோள் வலியோ?
ஆழிக் கிரி தள்ளும், ஓர் அங்கையினால்;
“Pushing back the Dig Gajas that bear the worlds in the great deluge, with shoulders, is that valour? This one would topple the humongous Chakravala Mount* just with his one hand.”
The ‘Chakkra VaaLa Mount in the mythology was believed to be an all-encompassing huge mountain that covered the whole orb of this universe, filtering sunlight through to the worlds. Kamban talks about this mythological myth in a few places in his epic. This one is found in the Kishkinta Khaandam – ‘Natpuk kOt padalam’
நக்கர கடல் புறத்து நண்ணும் நாள்
செக்கர் மெய் தனி சோதி சேர்கலா
சக்கர பொருப்பின் தலைக்கும் அ
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான்
காலங்கள் கணக்கு இற, கண் இமையா
ஆலம் கொள் மிடற்றவன், ஆர் அழல்வாய்
வேல் அங்கு எறிய, கொடு, ‘விட்டது நீள்
சூலம்கொல்?’ எனப் பகர் சொல் உடையான்;
“When Lord Siva the blue-necked one, Himself hurled his great trident at him, this one clutched it in his hands and mocked – “Is this your mighty trident?”
பகை ஆடிய வானவர் பல் வகை