Episode 01 - Chapter 34 - Canto on Ravana viewing the battle formations.
Chapter 34 – Canto on Ravana viewing the battle formations - இராவணன் களம் காண் படலம்
அலக்கண் எய்தி அமரர் அழிந்திட
உலக்க வானர வீரரை ஓட்டி அவ்
இலக்குவன்தனை வீட்டி இராவணன்
துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே.
With celestials in despair, having driven out the vanaras and ‘killed’ Lakshmana, Ravana was in exult.
பொருந்து பொன் பெருங் கோயிலுள், போர்த்தொழில்
வருந்தினர்க்கு, தம் அன்பினின் வந்தவர்க்கு,
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்,
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான்,
Ravana was keenly desirous of entertaining his committed and hard-working warriors to a deserving fete, in his grand, golden Royal palace.
'மான நாட்டு அந்த போகம் அமைத்திர்; மற்று
ஊனம் நாட்டின், இழத்திர் உயிர்' என்றான்.
Ravana commands that the very best be procured and provided at the feast:
'மான நாட்டு அந்த போகம் அமைத்திர்; மற்று ஊனம் நாட்டின், இழத்திர் உயிர்' ‘Make sure that the fare and entertainment are exceptional and best; if there is any slip or short-coming, beware, you shall lose your heads.’.
நறவும் ஊனும், நவை அற நல்லன
பிறவும், ஆடையும், சாந்தமும், பெய்ம் மலர்த்
திறமும், நானப் புனலொடு சேக்கையும்
புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால்.
Toddy and best wines, select meat and other salivating delicacies, clothes, sandal paste, floral decorations, scented water holes for bathing, these were spread all over – inside and out.
நானம் நெய் நன்கு உரைத்து, நறும் புனல்
ஆன கோது அற ஆட்டி, அமுதொடும்
பானம் ஊட்டி, சயனம் பரப்புவான்,
வான நாடியர் யாவரும் வந்தனர்.
Celesial maidens were called in – to bathe and feed the invitees – bathe them with cool water scented with ‘punugu’, scrubbing them thoroughly and feeding them with the delicious food and intoxicating drinks; and make them comfortable beds to lie on.
பாடுவார்கள்; பயில் நடம் பாவகத்து
ஆடுவார்கள்; அமளியில் இன்புறக்
கூடுவார்கள்; முதலும் குறைவு அறத்
தேடினான் என, பண்ணையின் சேர்ந்ததால்.
A talented and beautiful bevy of young women, accomplished in singing and dancing – and providing company in bed – was assembled. பண்ணை = collection of women.
As the revelry was all set -
இன்ன தன்மை அமைந்த இராக்கதர்
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்,
அன்ன சேனை களப் பட்ட ஆறு எலாம்
துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார்:
Messengers arrived as this revelry was set to go and whispered into Ravana’s ears: the whole episode of the core army’s total decimation at the hands of Rama.
இன்று யார் விருந்து இங்கு உண்பார்? - இகல்முகத்து இமையோர் தந்த
வென்றியாய்!- ஏவச் சென்ற ஆயிர வெள்ளச் சேனை
நின்றுளார் புறத்தது ஆக, இராமன் கை நிமிர்ந்த சாபம்
ஒன்றினால், இரண்டு மூன்று கடிகையின் உலந்தது'என்றார்.
“Who would partake of this feast here? Oh! The One elevated by the victories that the celestials conceded! As the one thousand vellam strong army (of yours) stood in combative formation, all of it was decimated by that one bow held by Rama – in the space of six naazhigais (144 minutes i.e. two hours and twenty four minutes).
இரண்டு மூன்று கடிகையின் is reckoned as two x three = 6 as is customary, by commentators. But I am inclined to add two and three and make it 5 naazhigais which would conform to the Aadhi Kaavya’s one eighth of a day – 3 hours.
'வலிக் கடன் வான் உளோரைக் கொண்டு நீ வகுத்த போகம்,
''கலிக் கடன் அளிப்பல்'' என்று நிருதர்க்குக் கருதினாயேல்,
பலிக் கடன் அளிக்கற்பாலை அல்லது, உன் குலத்தின்பாலோர்
ஒலிக் கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளரே உள்ளார்.*
“All this splendorous revelry you are offering, intending to reward your warriors, there are none to partake; all of them have left this sea-clad world; if anything, you shall offer them their final martyr rites. There are only those few in the city (who did not go out to fight).”
In shock and incredulity, Ravana would not believe the messengers:
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார்;
உன்னினும், உலப்பு இலாதார்; உவரியின் மணலின் நீள்வார்;
''பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர்'' என்று பேசும்
இந் நிலை இதுவோ? பொய்ம்மை விளிம்பினிர் போலும்' என்றான்.
“Those Rakshasa warriors were mightier than me and shall never fall. It is impossible even to imagine killing them. They outnumbered the grains of sand on the sea beach. To say that all of them, without a single exception, were killed? Aren’t you’ll lying?"
Maalyavaan (the perpetual, evergreen Ravana irritant) intercedes:
கேட்டு அயல் இருந்த மாலி, 'ஈது ஒரு கிழமைத்து ஆமோ?
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ? உலகம் யாவும்
வீட்டுவது இமைப்பின் அன்றே, வீங்கு எரி? விரித்த எல்லாம்
மாட்டுவன் ஒருவன் அன்றே, இறுதியில் மனத்தால்?'' என்றான்.
Maalyavaan, who was close by, would intervene: “Is this proper for you? Would the (faithful) messengers lie (to you in a matter of such grave importance)? (Why is this scale of devastation improbable?) Would not all the worlds be destroyed in an instant with just a thought invoked by that Rudra?”
Maalyavaan rubs in, where it nettles Ravana most:
'அளப்ப அரும் உலகம் யாவும் அமைத்துக் காத்து அழிக்கின்றான் தன்
உளப் பெருந் தகைமைதன்னால் ஒருவன்'' என்று உண்மை வேதம்
கிளப்பது கேட்டும் அன்றே? ''அரவின்மேல் கிடந்து, மேல் நாள்,
முளைத்த பேர் இராமன்'' என்ற வீடணன் மொழி பொய்த்து ஆமோ?
“Do not the vedhas acclaim the truth that there is that One who, with his thought (sankalpa) creates, provides and destroys all these worlds? And, Vibheeshana’s assertion that the one who reclines on that divine serpent (Aadhi Sesha), is incarnate as Rama, would that be false?”
பட்டதும் உண்டே உன்னை, இந்திரச் செல்வம்; பற்று
விட்டதும் மெய்ம்மை; ஐய! மீட்டு ஒரு வினையும் இல்லை;
கெட்டது, உன் பொருட்டினாலே, நின்னுடைக் கேளிர் எல்லாம்;
சிட்டது செய்தி' என்றான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான்.
“Oh! Sir! That the core forces were destroyed is a fact. The Indra resplendence (which you were lording over) having left you, is a fact too. There is nothing else you can do now. All your kin are gone because of your misdeeds. (Atleast now) do what is right.” Ravana was irate.
Enraged, Ravana still gloats – assuming that Lakshmana had been ‘killed’ by him:
'இலக்குவன்தன்னை வேலால் எறிந்து, உயிர் கூற்றுக்கு ஈந்தேன்;
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர்; அதனைக்கண்டால்,
உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப் பொறை உகவான்; உற்ற
மலக்கம் உண்டாகின் ஆக; வானை என் வயத்தது' என்றான்.
“I delivered Lakshmana to the god of death. All the vanaras are depressed with that grief (and would never again rise to fight). Rama would give up his life as well, as he sees Lakshmana fallen. If this news (of the core army’s destruction) is true, let it be. Victory is (yet) mine. “
The messengers, looking on, disabuse Ravana about Lakshmana:
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர், ஐய! மெய்யே
மீண்டது, அவ் அளவின் ஆவி, மாருதி மருந்து மெய்யில்
தீண்டவும்; தாழ்த்தது இல்லை; யாரும் அச்செங்கணானைப்
பூண்டனர் தழுவிப் புக்கார்; காணுதி போதி' என்றார்.
The messengers, listening to this exchange, would pipe in: “Oh! Lord! It is true that Lakshmana was revived, instantly, as the herbal mountain, brought by Hanuman, touched him. Everyone is embracing that Lakshmana - now with a new life. You go, Sir! And see for yourself!”
Stupefied, yet in disbelief, Ravana wants to check for himself:
தேறிலன் ஆதலானே, மறுகுறு சிந்தை தேற,
ஏறினன், கனகத்து ஆரைக் கோபுரத்து உம்பர் எய்தி,
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம்,
காறின உள்ளம் நோவ, கண்களால் தெரியக் கண்டான்.
Unwilling yet to believe what the messengers just told him, And in order to clear his mind, Ravana climbed atop a tall tower: and saw everything with his own eyes.
கொய் தலைப் பூசல் பட்டோர் குலத்தியர் குவளை தோற்று
நெய்தலை வென்ற வாள் - கண் குமுதத்தின் நீர்மை காட்ட,
கய் தலை உற்ற பூசல் கடலொடு நிமிரும்காலை,
செய்தலை உற்ற ஓசைச் செயலதும் செவியின் கேட்டான்.
Ravana saw and heard the Rakshasa women wailing beside their fallen men, beating their heads in grief.
குமிழி நீரோடும், சோரிக் கனலொடும், கொழிக்கும் கண்ணான்
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச் சிலை வழக்கில் சாய்ந்தார்
அமிழ் பெருங் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி,
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான்.
Ravana, with tears flowing and fire sparks issuing forth from his eyes, saw the wide range of assault of Rama’s darts, the diversity of killing comparable with the diverse codes for love-making inThamizh culture. He saw the blood flow filling the sea which appeared to gurgle and vomit it back – with its waves.
தமிழ் நெறி வழக்கம் – the poet refers to the classical coding of the love/conjugal life in Thamizh society, bifurcated between களவு - (love-making unobserved by parents/society, as spouses find each other) and கற்பு – total fidelity / virtuosity, after they are wed. Of these, the former code enumerates multifarious means and opportunities. A very very interesting allegory – but malapropos again?.
பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச் செந் தீ,
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
' ''ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக!'' என்று ஆனை மணி முரசு எற்றுக!' என்றான்.
His huge form emitting smoke issuing from his internal wrath, Ravana calls Mahodhara, a surviving commander and would command: “Whatever forces still remain in Lanka, mobilise all of them, right now. And broadcast this message through drum beats.”
The last battle – coming up.