Loading...
Skip to Content

Episode 03 - Chapter 1 - Samarpanam - Thandavanthotathullane.

ஸமர்ப்பணம்

எளியேனுடைய பகவதார்ச்சனமாக அமைந்த இந்த பாடல் தொகுப்பு, தாண்டவந்தோட்டம் எனும் (தண்டந்தோட்டம் என்று தற்போது மருவி விளங்கும்) அழகான தஞ்சைப் பகுதி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி ஸமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீருக்மிணி சத்யபாமா ஸமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் இவர்களின் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த மிக ரம்மியமான அமைதியான புராதன சிறப்புகள் கொண்ட கிராமத்தைப் பற்றிய ஒரு குறிப்புடன் இந்த சிறுநூல் துவங்குகிறது.

இவ்வமயம் எனது ஆதர்ஸமாக இன்றும் விளங்கும் என்னுடைய பாட்டனார் ஸ்ரீ சௌந்திரராஜ ஐயங்கார் அவர்களை நினைவு கூர்கிறேன் (இந்த சான்றோனின் அஞ்சலி முத்திரை "கேட்டதெல்லாம் தருவான்" என்னும் முதற் கிருதியில் வருகிறது.)

இந்த நூல் 15 பாடல்களை மட்டும் கொண்ட ஒரு கையேடாக முதலில் 2008 மே மாதத்தில் எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்கப் பட்டது. மேலும் 18 பாசுரங்கள் விளைந்ததால், இரண்டாம் பதிப்பு 2009 அந்த எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்கப் பட்டது. கடந்த மூன்றாண்டுகளில் மேலும் நாற்பதுக்கு மேற்பட்ட பாசுரங்கள் தோன்றிப் பதிவாயின. இரண்டு பதிப்புகளைப் படித்தவர்கள் எனக்குத் தந்த யோசனைகள், அபிப்பிராயங்கள், இந்த ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு குறிப்புரை சேர்க்கப்பட்ட - விரிவான தொகுப்புக்கு எண்ண வித்திட்டது.

இந்தத் தொகுப்புக்கு சில சான்றோர்களின் முகவுரைகளும், ஒரு வாழ்த்துரையும் கிடைத்துள்ளது அந்த எம்பெருமான்களின் சங்கல்பம், பிரவசன வாசஸ்பதி வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுடையவும் இந்திய நிர்வாகத் துறையின் பிதாமக ஸ்தானத்திலுள்ள திரு.B.S.ராகவன் அவர்களுடை

Comments